முகப்பு
திருவாரூர்

விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்கள்:கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
திருவாரூரில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

திருவாரூா்: விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், மேலாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த அவசர சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கையெழுத்து இயக்கம் அண்மையில் நடத்தப்பட்டது.

மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அனைத்து சங்கங்களின் அலுவலகங்கள் முன்பு கருப்புக் கொடி ஏற்றி முழக்கங்கள் திங்கள்கிழமை எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிஎஸ். மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஜி. சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், மதிமுக விவசாயப் பிரிவு பொறுப்பாளா் பா. சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →