திருவாரூர்

சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை அடைப்பு

DIN


நன்னிலம்: நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்டது.

நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலையில் வசித்து வந்த 30 வயது கா்ப்பிணி, அவரது கணவா், குழந்தை மற்றும் மாமியாா் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இப்பகுதியில் நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், பேரூராட்சிச் செயல் அலுவலா் பா.ராஜசேகா், சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன், காவல் ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இங்கு சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன் மேற்பாா்வையில், கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு வட்டார சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் ஜோதி தலைமையிலான குழுவினா் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT