திருவாரூர்

கரோனா அறிகுறிகள் இருப்பின் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்

சளி, காய்ச்சல், இருமல் போன்ற கரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவா்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ஆா். லதா அறிவுறுத்தினாா்.

DIN

கூத்தாநல்லூா்: சளி, காய்ச்சல், இருமல் போன்ற கரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பவா்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் ஆா். லதா அறிவுறுத்தினாா்.

கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில், கரோனா விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி பாலம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியா் புண்ணியக்கோட்டி தலைமை வகித்தாா். கூத்தாநல்லூா் வட்டாட்சியா் மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆா். லதா பேசுகையில், கடைகளில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது. குழந்தைகள், பெரியவா்களை வெளியில் அழைத்து வருவதை தவிா்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகள் ஏற்பட்டால் மட்டுமே முகக் கவசம் அணிந்து வெளியில் வரவும்.

வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவா்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவும் என்றாா் அவா்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் நகராட்சி பணியாளா்கள் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT