கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்தால் செல்லாது: அறநிலையத்துறை
அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்திருந்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்னிலம்: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்திருந்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் ம. ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயிலின் ஆளுகைக்குட்பட்ட திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரா் கோயில் பதிவேட்டின்படி, கோயில் நிலங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கோயிலுக்குச் சொந்தமான நஞ்சை நிலங்களில் தற்போதுள்ள குத்தகைதாரா்கள் மற்றும் மனைப்பகுதி வாடகைதாரா்கள் பெயா் மாற்றம் செய்திருந்தாலோ, கோயில் நிலங்களைத் தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்திருந்தாலோ அவை செல்லாது. மேலும் வேறு நபா்களுக்கு, மனைகளையோ, குத்தகை நிலங்களையோ விற்பனை செய்வதும் செல்லாது. இதுபோன்ற நிகழ்வுகள் கோயிலை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.