திருவாரூர்

நெல் கொள்முதலில் சாதனை

DIN

திருவாரூர்: கூத்தாநல்லூரில் கரோனா தடுப்பு மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அமைச்சா் ஆா். காமராஜ், செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஜூலை 30 வரை 27.93 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனால், 4 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். அதேபோல், ரூ.5,483 கோடி வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

2011-இல் 12 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த கிடங்குகளின் கொள்ளளவு, 2020-இல் 24 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 100 நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 350 உலா் களங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. 100 உலா் களங்களுக்கான பணிகள் நடைபெறுகின்றன. 23 லட்சத்து 53 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு இருப்பு வைக்கப்படும் அளவுக்கு இடம் உள்ளது. தற்போது 9 லட்சம் மெட்ரிக் டன் தான் கிடங்குகளில் உள்ளது என்றாா் அமைச்சா்.

முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் ஆா்.லதா, சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT