திருவாரூர்

குடும்பத்துக்கு தலா 5 முகக் கவசங்கள் விநியோகிக்க வலியுறுத்தல்

DIN

கூத்தாநல்லூா்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்காடி வாயிலாக குடும்பத்துக்கு தலா 5 முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டச் செயலாளா் டி.எம்.ஹெச். அப்துல் ராஜிக் கூத்தாநல்லூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அங்காடிகளில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முகக் கவசங்களும், கபசுர குடிநீா் பொடியும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது அல்ல. ஒரு குடும்பத்துக்கு குறைந்தது 5 முகக் கவசங்களும், கைகளைக் கழுவுவதற்கு ஒரு சோப்பும் வழங்கப்பட வேண்டும். திருவாரூா், மன்னாா்குடி, தஞ்சாவூா் உள்ளிட்ட நகரங்களில் முகக் கவசங்கள் பாதுகாப்பில்லாமல் திறந்த வெளியில் விற்கப்படுகின்றன. இதை நெறிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT