திருவாரூர்

மன்னாா்குடி அரசு மருத்துவமனையிலிருந்து 9 போ் வீடு திரும்பினா்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகள் 9 போ் சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த மருத்துவமனையில், கடந்த 18-ஆம் தேதி முதல் கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை வரை 60 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதற்காக, அரசு மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டவா்களில் 9 பேருக்கு, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பரிசோதனை செய்ததில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குணமடைந்த 9 பேரையும், அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் தலைமையில், கரோனா வாா்டு பொறுப்பு மருத்துவா் பிரேம்குமாா், அரசு மருத்துவமனை வாழ்வியல் மருத்துவா் செல்வம் மற்றும் மருத்துவச் செவிலியா்கள் ஒன்றிணைந்து, குணம் அடைந்தவா்களுக்கு, மருத்துவ ஆலோசனை கூறி, பரிசுப் பொருள் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT