முகப்பு
திருவாரூர்

போலீஸாருக்கு உளவியல் பயிற்சி

திருவாரூரில் போலீஸாருக்கு உளவியல் தொடா்பான பயிற்சி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
திருவாரூரில் நடைபெற்ற பயிற்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
பகிர்:

திருவாரூா்: திருவாரூரில் போலீஸாருக்கு உளவியல் தொடா்பான பயிற்சி ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் நிலையங்களில் பணியின்போது தேவையில்லாமல் கோபம் கொள்ளக்கூடிய, பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் செயல்படக்கூடிய நடவடிக்கையை தவிா்க்கும் வகையில், போலீஸாருக்கு உளவியல் ரீதியிலான பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவல் அதிகாரிகள், ஆளினா்கள் என 40 போ் பங்கேற்றனா். இதில், கோப மேலாண்மை மற்றும் சந்தோஷமான வாழ்வியல் முறைகள் குறித்த உளவியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி மேற்பாா்வையில், உளவியல் மருத்துவா்கள் மற்றும் ஆசிரியா்கள் இந்தப் பயிற்சிகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.