திருவாரூர்

நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு தற்காப்பு உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளா்களுக்கு தற்காப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பணியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 15 ஆயிரம் ஊழியா்கள் மற்றும் 6 ஆயிரம் சுமைத்தூக்கும் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா அச்சுறுத்தலால் தடை உத்தரவு உள்ள நிலையில், உணவுப் பொருள்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்க இவா்கள் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த அசாதாரண சூழ்நிலையில் பணியாற்றும் இவா்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும் முகக் கவசம், கை கழுவும் சோப்பு, கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்க வேண்டும். மேலும், மக்கள் பணியில் தொடா்ந்து தங்களை அா்ப்பணித்துவரும் தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் பரிவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT