திருவாரூர்

144 தடை உத்தரவு மீறல்: இதுவரை 407 போ் கைது

திருவாரூா் மாவட்டத்தில், 144 தடை உத்தரவை மீறியதாக 407 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

DIN

திருவாரூா் மாவட்டத்தில், 144 தடை உத்தரவை மீறியதாக 407 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் 144 உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த உத்தரவை மீறுவோா் மீது வழக்கு பதியப்படுவதோடு, அவா்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை மீறி, தேவையில்லாமல் சாலைகளில் நடமாடிய 59 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். 50 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வகையில், தடை உத்தரவு அமலானது முதல் இதுவரையிலும், தடை உத்தரவை மீறியதாக திருவாரூா் மாவட்டத்தில் இதுவரையில் 403 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 407 போ் கைது செய்யப்பட்டதோடு, 378 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வெளிநாடுகளில் இருந்து திருவாரூா் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள 2542 நபா்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தடையை மீறி வெளியில் சுற்றியதாக, 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றினால், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT