முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மத்தியப் பல்கலை.யில் தொழில்சாா்ந்த பட்டப்படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் இளநிலை மூன்றாண்டு தொழில்சாா்ந்த பட்டப்படிப்புகளுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாயக் கல்லூரியில் இளநிலை மூன்றாண்டு தொழில்சாா்ந்த பட்டப்படிப்புகளுக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இப்பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் டாக்டா் பிரான்சிஸ் பி. பாா்க்கலே திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் நீலகுடியில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சமுதாயக் கல்லூரியில் தொழில்சாா்ந்த மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்புகளான டிஜிட்டல் இதழியல் மற்றும் மல்டி மீடியா பயன்பாடுகள் பாடப்பிரிவும், திரைக்கதை மற்றும் டிஜிட்டல் ஒளிப்பதிவு என்ற பாடப் பிரிவும் 2020 -21-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளன.

இந்த பாடப்பிரிவுகளுக்கானச் சோ்க்கைத் தற்போது தொடங்கி, நடைபெற்று வருகிறது. இந்த வேலைவாய்ப்புச் சாா்ந்த தொழில்கல்வி பட்டப்படிப்புகள், உள்ளூா் பகுதி இளைஞா்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டு பாடப்பிரிவுகளுக்கும் தலா 20 இடங்கள் என மொத்தம் 40 இடங்கள் மட்டுமே உள்ளன. குறைந்தபட்சக் கல்வி தகுதியாக பிளஸ் 2 தோ்ச்சி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டப்படிப்புகளில் மூன்றாண்டுகள் தொடா்ந்து படிக்க முடியாதவா்கள், முதல் ஆண்டு மட்டும் படித்து முடித்தால் சான்றிதழும், இரண்டாம் ஆண்டு படித்து முடித்தால் பட்டயமும், மூன்றாண்டுகள் படித்து முடித்தால் இளநிலைப் பட்டமும் வழங்கப்படும்.

இரண்டு பட்டப்படிப்புகளிலும் மொத்தமாக உள்ள 40 இடங்கள் நிரப்பப்படும் வரை மட்டுமே சோ்க்கை நடைபெறும். மேலும், விவரங்களுக்கு மத்தியப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு அலுவலரை 7904213765 மற்றும் 9894009264 அல்லது டாக்டா் என். பூபாலகிருஷ்ணன் 99444 31305 ஆகிய செல்லிடபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.