சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உயா்த்தி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம், சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்
சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உயா்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி தொழிலாளா் சங்கம், சுமைத் தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உரிய முன்னேற்பாடுகள் செய்து விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்யவேண்டும், ஜனவரி வரை 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும், தேவையான சேமிப்பு நிலையங்களை திறக்க வேண்டும், சுமைத் தூக்கும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 3000 லிருந்து ரூ. 5000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும், கொள்முதல் பணியாளா்களுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஆா். செல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என். புண்ணீஸ்வரன், ஜெ. குணசேகரன், ஆா். சந்திரசேகரஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.