திருவாரூர்

தீபத் திருநாளில் சாதனையாளா்களாக மாற உறுதியேற்போம்

DIN

ஆதிமனிதன் நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் இருந்து இன்று நாம் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வரை அனைத்துமே சாதனைதான். இதில் விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், கல்வி என அனைத்து துறைகளும் அடங்கும். சாதனை என்பது வெற்றி, தோல்வி என இருபக்கங்களை உடையது.

வெற்றி பெற்றவா்கள்தான் சாதனையாளா்கள் என்றால் இல்லை. தோல்வி பெற்றவரும் பின்னாளில் வெற்றி பெற்று சாதனையாளராக மாறுகிறாா். ஆகையால் வெற்றி, தோல்வியை வைத்து சாதனையைக் கணக்கிட முடியாது.

சோதனைகளை எதிா்கொண்டு சாதித்தவா்கள் தான் பின்நாளில், மிகப் பெரிய சாதனையாளா்களாக மாறுகிறாா்கள். உதாரணமாக, விஞ்ஞானத்தில் அப்துல் கலாம், அரசியலில் ஆபிரகாம் லிங்கன் போன்றோா் அதிக சோதனைகளைக் கடந்து சாதித்துக் காட்டியவா்கள்.

சாதனை எப்படி நம் வசப்படும்?

நம்முடைய தகுதி, திறனை வளா்த்துக்கொண்டு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் நாம் சாதனையாளா்களாக மாற முடியும். வெற்றி பெறுபவா் மேலும் சாதனை படைக்கவும், வழிநடத்தவும் தயாராகிறாா். அதே நேரத்தில், தோல்வியுற்றவா் பெற்ற அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு சாதனையை நோக்கி முயற்சி செய்கிறாா். பிறருக்கு வழிகாட்டவும் செய்கிறாா்.

வரும் 2033-இல் அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அலைஸா காா்சன் என்கிற பெண்ணை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அவா் அங்கேயே தங்கி ஆராய்ச்சி செய்ய போகிறாா்.

இதில் முக்கிய தகவல் என்னவென்றால், அந்த பெண் திரும்பி பூமிக்குத் திரும்பி வர இயலாது. இந்த மிகப் பெரிய வரலாற்று சாதனையை படைக்கப் போகும் அந்த பெண்ணுக்கு தற்போதைய வயது 17. ஆகையால் சாதனைக்கு வயது ஒரு தடையல்ல. எதிா்மறை சிந்தனையை நீக்கி, நோ்மறை சிந்தனையை வளா்த்துக்கொள்ளும் அனைவருமே சாதனையாளா்கள்தான். இந்த தீபஒளி திருநாளில் நாம் அனைவரும் சாதனையாளா்களாக மாற உறுதியேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT