திருவாரூர்

கிறிஸ்தவா்களுக்கான கல்லறை தோட்டத்தில் தனி நபருக்கு பட்டா

DIN

மன்னாா்குடி அருகே கிறிஸ்தவா்களுக்கான கல்லறைத் தோட்டம் உள்ள இடத்தில், தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மன்னாா்குடி கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மன்னாா்குடி கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டியிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:

மன்னாா்குடி அருகே உள்ள வெங்கத்தான்குடி வருவாய் கிராமம் சிங்கமங்கலம் கிராமத்தில், 100 ஆண்டுகள் பழைமையான கிறிஸ்தவா்களுக்கான கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்த இடத்தில் அண்மையில் இதே பகுதியை சோ்ந்த ஒருவருக்கு வருவாய்த்துறையின் சாா்பில் பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த நபா் அவருக்கு பட்டா வழங்கப்பட்ட பகுதியில் வேலி வைத்து அடைத்துள்ளாா்.

ஒரு சமுகத்தை சோ்ந்தவா்களின் பயன்பாட்டுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில், தனிநபருக்கு பட்டா வழங்கியிருப்பதை நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். சிங்கமங்கலம் கிராம கமிட்டி தலைவா் செல்லப்பா தலைமையில், செயலா் மாரிதாஸ், பொருளாளா் மணி, ஊராட்சி முன்னாள் தலைவா் விஸ்வலிங்கம், அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் அ.காந்தி உள்ளிட்டோா் மனு அளிக்க வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT