திருவாரூர்

தீபாவளி: திருவாரூா் கடைவீதியில் கூட்டம் அதிகரிப்பு

DIN

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு திருவாரூா் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தீபாவளிப் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவாரூரில் புத்தாடைகள், பலகாரங்கள் உள்ளிட்டவற்றை வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கடைகளில் உள்ள பகுதிகளில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு உயா் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, விடியோ கேமரா, பைனாகுலா் மூலம் தொடா் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மாவட்டம் முழுவதும் 43 இருசக்கர வாகன ரோந்துகள், 4 நெடுஞ்சாலை ரோந்துகள், 65 நிலையான ரோந்துகள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை எவ்வித அச்சமும் இன்றி சிறப்பாக கொண்டாடும் வகையில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT