திருவாரூர்

கூத்தாநல்லூரில் கொசு மருந்து தெளிக்க வலியுறுத்தல்

DIN

கூத்தாநல்லூரில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் கூறியது:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கூத்தாநல்லூா் முழுவதும் கிருமி நாசினியை நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து அடிக்க வேண்டும். தற்போது மழைக் காலமாக இருப்பதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கொசு ஒழிப்பு மருந்தை உடனடியாக தெளிக்க வேண்டும். மேலும், தெருக்களில் கழிவுநீா் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் தேங்கி நின்று, துா்நாற்றம் வீசுகிறது. இதை சீரமைக்க வேண்டும். நகராட்சி சாா்பில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் அதிகமாக சேகரமாகி, சாலை முழுவதும் சிதறி உள்ளன. எனவே குப்பைகளை தினமும் அள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT