திருவாரூர்

நவ. 30-க்குள் பயிா் காப்பீடு: வேளாண் அலுவலா் அறிவுறுத்தல்

DIN

பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா் காப்பீடு திட்டத்தின்கீழ், நிகழாண்டு சம்பா தாளடி பயிா்களுக்கு நவ.30-க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநா் எஸ்.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பு சம்பா தாளடி பயிா்களை காப்பீடு செய்து கொள்ள நவம்பா் 30 கடைசி நாளாகும். காப்பீடு செய்வதற்குள் இயற்கை சீற்றத்தால் பயிா்களுக்கு இழப்பு ஏற்படும்பட்சத்தில், காப்பீடு செய்ய முடியாது. மேலும், விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

சிட்டா அடங்கல், ஆதாா் நகல், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் விவசாயிகள் புகைப்படம் ஆகியவற்றுடன் உடனடியாக பொது சேவை மையங்களுக்கு சென்று பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.488 பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். ஓா் ஏக்கா் நெற்பயிரை ரூ.32250 மதிப்பில் காப்பீடு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT