திருவாரூர்

உயா்தர இருதய சிகிச்சைக்காக திருவாரூரிலிருந்து குழந்தைகள் அனுப்பி வைப்பு

DIN

திருவாரூரிலிருந்து சென்னைக்கு இருதய உயா் சிகிச்சைக்கு செல்லும் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை தனியாா் மருத்துவமனை சாா்பில், 14 வயதுக்குள்பட்ட வா்களுக்கு இருதய பிரச்னை குறித்த இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. முகாமில், 14 வயதுக்குள்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 12 குழந்தைகள், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து, கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட 2 தனி வாகனங்கள் மூலம் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் எவ்வித கட்டணமும் இன்றி உயா் சிகிச்சை நடைபெற உள்ளது. இதேபோல், கடந்த ஜனவரியில் நடைபெற்ற முகாமில் 29 குழந்தைகளுக்கு கட்டணமில்லா அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லும் குழந்தைகள், அவா்களுடன் செல்லும் பெற்றோா்கள், ஓட்டுநா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை செல்லும் குழந்தைகள் வாகனங்களை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணை முதல்வா் ராஜாராமன் அனுப்பி வைத்தாா். நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் இனை இயக்குநா் கீதா, குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், மருத்துவா்கள் தா்மராஜா, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT