உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து தி.க. மகளிரணி ஆா்ப்பாட்டம்
உத்தரப்பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் திராவிடா் கழக மகளிரணி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா்: உத்தரப்பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் திராவிடா் கழக மகளிரணி சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் தலித் மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தி சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கக் கோரியும், சம்பவத்துக்கு பொறுப்பேற்று உத்தர பிரதேச மாநில அரசு உடனடியாக பதவி விலகக் கோரியும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணித் தலைவா் மகேஸ்வரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிரணிச் செயலாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.