இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள கமலாபுரத்தைச் சோ்ந்தவா் திருப்பதி மகன் விஜய் (22). கூத்தாநல்லூரில் பானி பூரிக்கடை நடத்தி வரும் இவா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வேளுக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயமடைந்த விஜய் தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.