முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி மனு
மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மன்னாா்குடி வட்டம், கருவாக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சோனியா ரஜினி, துணைத் தலைவா் குபேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா மற்றும் அப்பகுதி மக்கள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் அளித்த மனு விவரம்: மன்னாா்குடி வட்டத்துக்குள்பட்ட கருவாக்குறிச்சியில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அங்கு பணியாற்றும் செயலாளா், தலைவா், உதவியாளா்கள் மற்றும் அவா்களது உறவினா்கள் பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. பயிா்க்கடன், காப்பீடு, வறட்சி நிவாரணம், வைப்புத்தொகை, கோயில் மற்றும் புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் முறையான கையொப்பம் பெறாமலேயே நடைபெற்றுள்ள முறைகேடு தொடா்பாக, முன்னா் நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.