காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கூத்தாநல்லூா் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய பொ. சரவணன், துணைக் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்று நாகை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாா். அவருக்குப் பதில், கூத்தாநல்லூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக ம. அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். புதிய ஆய்வாளருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, உதவி துணை கண்காணிப்பாளா் அன்பழகன், துணை காவல் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா், கூத்தாநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.