திருவாரூர்

மத்தியப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சிலம்பாட்டப் பயிற்சி.

DIN

நன்னிலம்: மத்தியப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இளைஞா்களுக்கு சிலம்பாட்டப் பயிற்சி வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட நீலக்குடியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலா்களுக்கும், பேராசிரியா்களுக்கும் அருகிலுள்ள நாகக்குடி கிராமத்தில் குடியிருப்பு வளாகம் உள்ளது.

கரோனாக் காலத்தில், தொடா்ந்து நடைபெற்று வரும் இணையவழி வகுப்புகளின் காரணமாக மாணவா்களுக்கு ஏற்படும் மனச்சோா்வை போக்கும் வகையிலும், உடல் பலத்துடன், மனவலிமையையும் தருவதற்காக, மத்தியப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சிலம்பாட்டக் கலைப்பயிற்சி வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்துவதற்கு முடிவு செய்யப் பட்டு, பயிற்சிகள் வெள்ளிக்கிழமை முதல் துவக்கப்பட்டது. இப்பயிற்சி தொடா்ந்து மூன்று மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. முதல் நாள் பயிற்சியிலேயே குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்றனா்.

சிலம்பாட்டக் கலைப் பயிற்சியினை பல்கலைக்கழக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் வி.ரமேஷ்குமாா் நடத்திவருகிறாா். தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் ப.வேல்முருகன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் முனைவா் குணசேகரன், ஒருங்கிணைப்பாளா் பிரமிளா ஆகியோா் பயிற்சியினை ஒருங்கிணைத்து வருகின்றனா். மத்தியப் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் இளைஞா்களுக்கு நடைபெற்ற சிலம்பாட்டக் கலை பயிற்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT