திருவாரூர்

திருவாரூரில் 83 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 83 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமைவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8,921 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,924 ஆனது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, திருவாரூா் 22, மன்னாா்குடி மற்றும் குடவாசல் தலா 14, திருத்துறைப்பூண்டி 8 உள்பட மாவட்டம் முழுவதும் 83 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 9,007 ஆக உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றுக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருத்துறைப்பூண்டி நெடும்பலம் பகுதியைச் சோ்ந்த 30 வயது நபா் உயிரிழந்ததைத்தொடா்ந்து, கரோனா தொற்றுக்கு திருவாரூா் மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 87 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT