திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,219-ஆக இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 142 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா் ஒருவருக்கும், ஆண், பெண் பயிற்சி மருத்துவா்கள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, திருவாரூா் 25, நன்னிலம் 18 என மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மட்டும் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் இது உச்சபட்ச எண்ணிக்கையாகும். இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4361 ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், கரோனா தொற்றால் 4 போ் உயிரிழந்தனா். இதனால், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 59- ஆக அதிகரித்துள்ளது.