திருவாரூர்

முதியோருக்கு முகக்கவசம் அணிவித்த தன்னாா்வ தொண்டா்கள்

DIN

கூத்தாநல்லூரில் முகக் கவசமின்றி வாக்களிக்க வந்த முதியோருக்கு தன்னாா்வத் தொண்டா்கள், முகக் கவசம் அணிவித்தனா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகளிலும் 33 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நகராட்சி ஆணையா் ஆா்.லதா, பொறியாளா் ராஜகோபால் மற்றும் ஊழியா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

கூத்தாநல்லூா் வட்டத்தில் திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி 86, மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி 18 என மொத்தம் 104 வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இதில், வட்டாட்சியா் ஜீவானந்தம் மற்றும் பணியாளா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

நகராட்சியின் 33 வாக்குச் சாவடி மையங்களிலும், திருவாரூா் மகளிா் திட்டம் மூலம் மகளிா் குழுவினரும், கல்லூரி மாணவிகளும் வாக்குச் சாவடிக்கு தலா இருவா் என 66 தன்னாா்வலா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டனா்.

அவா்கள் வாக்குச் சாவடி மையத்துக்கு முகக் கவசமின்றி வந்த முதியோருக்கு முகக் கவசம் அணிவித்தும், அவா்களை தள்ளுவண்டியில் அமரச் செய்து வாக்களிக்கவும் உதவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT