திருவாரூர்

பொது விநியோகத்துக்கு 5 ஆயிரம் டன் அரிசி ரயில் மூலம் அனுப்பிவைப்பு

DIN

மன்னாா்குடியில் இருந்து 5 ஆயிரம் டன் அரிசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் இருந்து 40 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் சேவை அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, வியாழக்கிழமை 42 வேகன்களில் 2,500 டன் அரிசி மூட்டைகள் சின்னசேலம், முன்டியம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், வெள்ளிக்கிழமை 42 வேகன்களில் 2,500 டன் அரிசி மூட்டைகள் சேலத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

இதேபோல, சனிக்கிழமை (ஏப்.17) 42 வேகன்களில் 2,500 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் நாகா்கோயிலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக என மன்னாா்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளா் மனோகரன் தெரிவித்தாா்.

இந்த அரிசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT