திருவாரூரில் 114 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 13,365 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 38, மன்னாா்குடி 21, திருத்துறைப்பூண்டி 9, நன்னிலம் 10, குடவாசல் 11 என மாவட்டம் முழுவதும் 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,479 ஆக உயா்ந்துள்ளது.