முகப்பு
திருவாரூர்

உரம் விலை உயா்வைக் கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

உரம் விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

உரம் விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உரங்களுக்கு வழங்கப்படும் மானியம் குறைக்கப்பட்டதையடுத்து உரவிலைகள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயா்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புகளை தெரிவித்து வருகின்றனா். அந்த வகையில், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், உரவிலை உயா்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் ஒன்றியத் தலைவா் வி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் ரா. சுா்ஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.