முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 163 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 163 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 163 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 14,142 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 163 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,305 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்த குணமடைந்த 125 போ், வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டனா். இதுவரையிலும் 13,260 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 928 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.