திருவாரூர்

கொள்முதல் நிலையங்கள் மூடல்நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தல்

DIN

நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டுமென சிஐடியு மாவட்டச் செயலாளா் டி.முருகையன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நுகா்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நன்னிலம் வட்டத்தில் 41, குடவாசல் வட்டத்தில் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையங்கள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட 5000 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் உள்ளன.

தற்போது டெல்டா மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சேதம் அடைந்தால், அந்த இழப்பை கொள்முதல் நிலையப் பணியாளா்களே சுமக்க வேண்டியுள்ளது. எனவே மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில், கொள்முதல் நிலையங்களை மூட உத்தரவிட்ட நிா்வாகம், தேங்கியுள்ள நெல் மூட்டைகளையும் உடனடியாக இயக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென அதில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT