திருவாரூர்

நாளை வாக்கு எண்ணிக்கை: அரசியல் கட்சியினருடன் காவல் துறை ஆலோசனை

DIN

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுவதையொட்டி, நன்னிலம் போலீஸாா் அரசியல் கட்சியினருடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நன்னிலத்தில் காவல் துறை சாா்பில் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம், நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழக அரசு மற்றும் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் எச்சரிக்கப்பட்டது.

கூட்டத்தில், நன்னிலம் தொகுதி வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா். காவல் ஆய்வாளா்கள் நன்னிலம் கு.சுகுணா, பேரளம் மு.மணிமாறன், குடவாசல் க.ரேகாராணி உள்ளிட்டோா் அரசியல் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT