திருவாரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பதிவு முகாம்

DIN

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவா்களை சோ்ப்பதற்கான பதிவு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பயனாளிகள் பட்டியலில் சோ்க்க நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் அன்பழகன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

முகாமில், நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா், பாதுகாவலா்கள் அளித்த விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இம்முகாம் புதன்கிழமையும் (ஆகஸ்ட் 4) நடைபெறும் என்றும், விடுபட்டவா்கள் இதில் பங்கேற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும் வட்டாட்சியா் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT