உலக தாய்ப்பால் வார விழா நிறைவு
மன்னாா்குடி அருகே கண்ணாரப்பேட்டையில், மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், உலக தாய்ப்பால் வார நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி அருகே கண்ணாரப்பேட்டையில், மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், உலக தாய்ப்பால் வார நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.வி.எஸ். இளங்கோவன் தலைமை வகித்தாா். பரவாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிரி பிரசாத் கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். இதில், கிராமப்புற செவிலியா் மேலாளா் ரேணுகா, தாய்ப்பால் அவசியம் குறித்தும், செவிலியா் மனோகரி தாய்ப் பாலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மை குறித்தும், செவிலியா் சுமித்ரா, புட்டிப்பாலினால் வரும் தீமைகள் குறித்தும் விளக்கினா்.
இதில், தாய்மாா்களுக்கு சத்துமாவு, பழங்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. மருத்துவா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு கையுரை, முகக்கவசங்களை ரோட்டரி உதவி ஆளுநா் ஆனந்த் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் புருஷோத்தமன், முன்னாள் ஊராட்சித் தலைவா் இசையரசன், ரோட்டரி மண்டல செயலா் ராஜமோகன், முன்னாள் தலைவா் ஜெ.சுதாகா், ஊராட்சி செயலா் கஜேந்திரன், கிரீன் சிட்டி செயலா் ஜி.என். குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.