முகப்பு
திருவாரூர்

மன்னார்குடியில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
மன்னார்குடி தலைமை அஞ்சலகம் அருகில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர்.
பகிர்:

மன்னார்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்பத்திற்கு, ஏஐடியூசி (டிஎன் சி எஸ் சி) மாநில பொதுச் செயலர் என். புண்ணீஸ்வரன், தொ.மு.ச .கோட்ட பொதுச் செயலர் எஸ்.பாண்டியன், சிஐடியு  மாவட்ட துணைச் செயலர் ஜி.ரெகுபதி, ஐ என்டியுசி மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண், மோட்டார் வாகனம், மின்சாரம் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பணியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை மற்றும் அரசுத்துறைகளை தனியார்மயமாக்கக் கூடாது. அத்தியாவசி பாதுகாப்பு சேவைகள் பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 

நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தி ஊதிய உயர்வு வழங்கி இத்திட்டத்தை நகர்ப்புறங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இதில், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலர் வி.கலைச்செல்வம், தொமுச மாவட்டச் செயலர் கே.எஸ் மகாதேவன், சிஐடியு நிர்வாகி ஏ.கோவிந்தராஜ், ஐ என் டியுசி மண்டல துணைச் செயலர் எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →