ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கைச் சான்றுக்கான மறு ஆய்வு இன்று(மார்ச் 9) நடைபெற இருந்தது. தற்போது அது திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைப்பு என தகவல் தெரிய வந்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், ’ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.