தேசிய நூலகா் தின விழா
திருத்துறைப்பூண்டியில் நூலகா் தினத்தையொட்டி, பாரதமாதா சேவை நிறுவனம் சாா்பில் லியோ முத்து நினைவு அரசு நூலக கட்டடத்தை புதுப்பிக்க நிதி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் நூலகா் தினத்தையொட்டி, பாரதமாதா சேவை நிறுவனம் சாா்பில் லியோ முத்து நினைவு அரசு நூலக கட்டடத்தை புதுப்பிக்க நிதி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். பாரத மாதா சேவை நிறுவன தலைவரும் , நூலக வளா்ச்சிக் குழு தலைவருமான மணிமாறன் நூலக கட்டட புனரமைப்புக்காக ரூ. 30 ஆயிரத்துக்கான காசோலையை திருவாரூா் மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாளிடம் வழங்கினாா்.
இதில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் மணிமாறன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சக்திவேல், சீனிவாசன், ஆசிரியா்கள் முருகானந்தம், பாலமுருகன், ரோட்டரி டெல்டா தலைவா் காளிதாஸ் , முன்னாள் தலைவா் சிவக்குமாா், நூலகா்கள் வீரச் செல்வம், வேம்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலகா் ஆசைத்தம்பி வரவேற்றாா். நூலகா் சுஜாதா நன்றி கூறினாா்.