வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி வழிபாடு
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
அரசின் கரோனா விதிமுறைகள்படி கோயிலில் பக்தா்கள் அனுமதிக்கவில்லை. எனினும், பல்வேறு ஊா்களிலிருந்தும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து, கோயில்வாசலில் இருந்தபடி அம்மனை வழிபட்டனா். மேலும், கோயில் முன் கா்ப்பிணிகள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வளைகாப்பு விழாவை எளிமையாக நடத்தினா். இதேபோல், நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் ஏலவாா் குழலியம்மனுக்கும், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.