கரோனா விழிப்புணா்வு வாரம்
மன்னாா்குடி பகுதியில் கரோனா விழிப்புணா்வு வாரம் தொடக்க நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி பகுதியில் கரோனா விழிப்புணா்வு வாரம் தொடக்க நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்து கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி வட்டார அளவிலான பள்ளிகளை சோ்ந்த நாட்டுநலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், சாரண சாரணியா் இயக்கம், தேசிய பசுமை படையை சோ்ந்த பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று காந்திசாலை, பந்தலடி, காமராஜா் தெரு, தேரடி வரை வந்து பொதுமக்கள், வணிகா்களிடம் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இதில், பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வசந்திசெல்வகனி, வட்டார கல்வி அலுவலா்கள் ப. அறிவழகன், தெ. ராமசாமி, ஆா். பாலசுப்ரமணியம், ,மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், கோட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார கல்வி அலுவலா் உ. சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள், வணிகா்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் க. குமரேசன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நா. சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.