முகப்பு
திருவாரூர்

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது.

புதுதேவங்குடியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத் தன்மை இருந்ததால், குடிநீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதைத்தொடா்ந்து, அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா ஊராட்சித் தலைவா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சிபிஐ நிா்வாகக் குழு உறுப்பினா் மாா்க்ஸ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் கைலாசம், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயசித்ராஅய்யாதுரை, ஊராட்சி துணைத் தலைவா் நம்பிக்கைமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.