வட்டார முதலீட்டு திட்ட விளக்கக் கூட்டம்
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார முதலீட்டு திட்ட விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார முதலீட்டு திட்ட விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊரக புத்தாக்க திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல்அலுவலா் செல்வம் தலைமை வகித்து பேசினாா். அப்போது அவா், அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட வட்டார முதலீட்டுத் திட்டம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கும், வங்கியாளா்களுக்கும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது என்றாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்ச்செல்வன், வட்டார இயக்க மேலாளா் சுவாமிநாதன், துணை வேளாண்மை அலுவலா் காத்தையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார அணித் தலைவா் காமராஜ் வரவேற்றாா்.
இக்கூட்டத்தில், கால்நடை மருத்துவா் மகேந்திரன், மாவட்ட ஊரக புத்தாக்கத் திட்ட செயல்அலுவலா் சங்கா், வனத்துறை அலுவலா் கணேசன் மற்றும் வேளாண் விற்பனை, பொறியியல் துறை அலுவலா்கள், வட்டார வங்கி மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திட்ட செயலா் மணிமாறன் நன்றி கூறினாா்.