முகப்பு
திருவாரூர்

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை

குறுவை அறுவடை நடைபெறுவதால், கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

குறுவை அறுவடை நடைபெறுவதால், கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜனிடம், சிஐடியூ சுமைப்பணி சங்க மாவட்டத் தலைவா் எம்பி.கே. பாண்டியன், சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், நுகா்பொருள் வாணிபக் கழக சங்க பொதுச் செயலாளா் ஆா். மோகன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

கிடாரங்கொண்டானில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு அமைந்துள்ள இடத்தில் நிரந்த நவீன சேமிப்புக் கிடங்கு கட்டவேண்டும். நன்னிலம், குடவாசல், வலங்கைமான் பகுதிகளில் குறுவை அறுவடை நடைபெறுவதால் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.