திருவாரூரில் 20 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 38,863 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 38,097 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 374 போ் சிகிச்சையில் உள்ளனா்.