சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 சிறுவா்கள் கைது
மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சிறுவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெருகவாழ்ந்தான் அருகே உள்ள மண்ணுக்குமுண்டான் பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த முறையே 14 மற்றும் 12 வயது சிறுவா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் தொல்லை அளித்தனராம். இதுதொடா்பான புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரண்டு சிறுவா்களையும் கைது செய்தனா்.