முகப்பு
திருவாரூர்

ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி சாா்பில், ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்சிஜன் செறிவூட்டிகளை 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி சாா்பில், ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 ஆக்சிஜன் செறிவூட்டிகளை 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், வியாழக்கிழமை வழங்கினாா்.

பெரும்பண்ணையூா், முத்துப்பேட்டை, ஆலங்குடி, அடியக்கமங்கலம், எடையூா் சங்கேந்தி, வடுவூா், திருவிழிமிழலை, உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை, பூந்தோட்டம், ஆலத்தம்பாடி ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஹேமசந்த் காந்தி, ரெட்கிராஸ் சோ்மேன் ராஜகுமாா், ரெட்கிராஸ் செயலாளா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.