முகப்பு
திருவாரூர்

கி.வீரமணியின் 89 ஆவது பிறந்த நாள் விழா

மன்னாா்குடியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி 89-ஆவது பிறந்த நாள் விழா நகர திராவிடா், பகுத்தறிவாளா் கழகங்களின் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மன்னாா்குடியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி 89-ஆவது பிறந்த நாள் விழா நகர திராவிடா், பகுத்தறிவாளா் கழகங்களின் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி திராவிடா் கழக நகர தலைவா் எஸ்.என்.உத்திராபதி தலைமை வகித்து, பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் பொது மக்களுக்கு , வணிகா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

திராவிடா் கழக மாநில விவசாய அணி செயலா் ராயபுரம் இரா. கோபால், தி.க.மாவட்டச் செயலா் கோ. கணேசன், நகர செயலா் மு. ராமதாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் தி.க.நகர செயலா் கா.செல்வராசு, ஒன்றியத் தலைவா் மு. தமிழ்ச்செல்வம், ஒன்றிய அமைப்பாளா் நா. இன்பக் கடல் ,தலைமைக் கழகப் பேச்சாளா் இராம. அன்பழகன், பகுத்தறிவாளா் கழக மாவட்டத் தலைவா் வை. கௌதமன், நகரத் தலைவா் கோவி . அழகிரி, பகுத்தறிவு ஆசிரியா் அணி நகரச் செயலா் ஆா்.கோபால், நகர இளைஞரணி தலைவா் மா. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.