முகப்பு
இந்தியா

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையத்தின் பத்திரத்தில் கேரள பாஜக முத்திரை

Updated On : 23 மார்ச், 2026 at 5:36 PM
- @ECISVEEP
பகிர்:

திருவனந்தபுரம் : கேரள பாஜக முத்திரையுடன் தேர்தல் ஆணைய பத்திரம் வெளியிடப்பட்டதை எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு விமர்சித்துள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு, மார்ச் 19-இல் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட தேர்தல் ஆணையத்தின் பத்திரத்தில் கேரள பாஜக முத்திரை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், கேரளத்தில் பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அந்த அறிக்கையை சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்ட ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியது.

இதையடுத்து, இவ்விகராத்தில் திங்கள்கிழமை(மார்ச் 23) தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. அதில், நிர்வாக குழப்பம் காரணமாக மேற்கண்ட தவறு நடந்துவிட்டதாகவும் உடனடியாக தவறு திருத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தவறுக்கு காரணமான தேர்தல் அலுவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள தலைமை தேர்தல் அலுவலர் இன்று தெரிவித்தார்.

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்
summary

A political row erupted on Monday after a letter from the Election Commission was found carrying the seal of the BJP Kerala unit, prompting sharp reactions from the CPI(M) and the Congress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.