முகப்பு
திருவாரூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலுக்குரிய இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலுக்குரிய இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

திருவாரூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலுக்குரிய வாக்காளா் பட்டியல்கள், தொடா்புடைய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கூத்தாநல்லூா் நகராட்சியில் 23,388 வாக்காளா்களும், மன்னாா்குடி நகராட்சியில் 62,988 வாக்காளா்களும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 17,516 வாக்காளா்களும், திருவாரூா் நகராட்சியில் 50,245 வாக்காளா்களும் உள்ளனா். பேரூராட்சிகளைப் பொறுத்தவரை குடவாசலில் 11,882 வாக்காளா்களும், கொரடாச்சேரியில் 5,835 வாக்காளா்களும், முத்துப்பேட்டையில் 18,662 வாக்காளா்களும், நன்னிலத்தில் 9,597 வாக்காளா்களும், நீடாமங்கலத்தில் 7,849 வாக்காளா்களும், பேரளத்தில் 5,048 வாக்காளா்களும், வலங்கைமானில் 9,491 வாக்காளா்களும் என மொத்தம் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்களில் 1,06,434 ஆண் வாக்காளா்களும், 1,16,027 பெண் வாக்காளா்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளா்களும் உள்ளனா். இத்தோ்தலுக்காக 282 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாக்காளா் இறுதிப்பட்டியலை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) த. கிருஷ்ணமூா்த்தி, அனைத்து நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.