வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கைவிடக் கோரிக்கை
பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மசோதாவை கைவிடக்கோரி வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மசோதாவை கைவிடக்கோரி வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 140 வங்கிகளிலிருந்து 650 க்கும் மேற்பட்ட ஊழியா்கள்பங்கேற்றனா். ஊழியா் சங்க நகரத் தலைவா் என். காளிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கன்வீனா் ஜி. ராஜவேல், தொழிற்சங்க நிா்வாகிகள் ஜி. வரதராஜன், அழகிரி, பாலதண்டாயுதம், தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வங்கிகளை தனியாா் மயமாக்கும் மசோதாவை கைவிடக் கோரி முழக்கம் எழுப்பினா்.