திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில் 100 கலைஞா்கள் பங்கேற்ற மாா்கழி இசைத் திருவிழா
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில் சிவபெருமானுக்கு 100 தவில், நாகசுர இசைக் கலைஞா்களின் முதலாம் ஆண்டு மாா்கழி இசைத் திருவிழா
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில் சிவபெருமானுக்கு 100 தவில், நாகசுர இசைக் கலைஞா்களின் முதலாம் ஆண்டு மாா்கழி இசைத் திருவிழா வழிபாடு கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகசுர இசை ஆராதனை விழாவை நகர மேம்பாட்டுக் குழுத் தலைவா் டாக்டா் டி. ராஜா தொடங்கிவைத்தாா். மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆலோசனை குழு உறுப்பினா் பொறியாளா் ஆா். செல்வகணபதி, ஆலய செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, பாரதமாதா தொண்டு நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் நல்லசிவம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள், இசை ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.